Entertainment23 September 2025

"மது அருந்திவிட்டு அசைவம் சாப்பிட்டவர்கள் காந்தாரா திரைப்படம் பார்க்க வரக்கூடாது” - ரிஷப் ஷெட்டி விளக்கம்

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா பாகம் 1 எதிர்வரும் அக்டோபர் 2 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 
 
இந்த திரைப்படத்தின் டிரைலர் அனைத்து மொழிகளிலும் நேற்று (22) வெளியாகிய நிலையில் இதுவரை 7 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 
 
இந்த நிலையில், டிரைலர் வெளியிட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரிஷப் ஷெட்டியிடம், “மது அருந்துவிட்டு, புகைபிடித்துவிட்டு, அசைவம் சாப்பிட்டுவிட்டு காந்தாரா பாகம் 1 திரைப்படத்தைக் காண வரக்கூடாது" என போலி அறிவிப்பு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருவது குறித்து கேள்வி எழுப்பினார். 
 
இதற்குப் பதிலளித்த ரிஷப் ஷெட்டி, “உணவு என்பது அவரவர் உரிமை, விருப்பம் சார்ந்தது. அந்த போலி அறிவிப்பு வெளியானபோது முதலில் எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால், ஒரு போலியான விடயத்திற்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும் என்றே நாங்கள் எதுவும் சொல்லவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
Related Recomands
Hiru TV News | Programmes