General23 September 2025

ரங்க திசாநாயக்கவின் நியமனத்தை சவாலுக்குட்படுத்திய மனு மீளப் பெறப்பட்டது.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை இன்று மனுதாரர்கள் மீளப்பெற்றனர்.

ஞான பிரபா தேரர் உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கடந்த ஜனவரி 10 ஆம் திகதி ஜனாதிபதியால் செய்யப்பட்ட இந்த நியமனம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகவும், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் அடிப்படை உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

குறித்த வழக்கு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபயகோன் ஆகியோரை கொண்ட மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரர்களின் சட்டத்தரணி, மனுவை மீளப் பெற நீதிமன்றத்தின் அனுமதி கோரினார்.

இந்த கோரிக்கையை அனுமதித்த நீதியரசர்கள் ஆயம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Related Recomands
Hiru TV News | Programmes