Entertainment23 September 2025

கைவிடப்பட்டதா கைதி 2 திரைப்படம்?

கைதி 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் செய்தியொன்று பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான கூலி திரைப்படம் நல்ல வசூலைக் குவித்தாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனையடுத்து ஆமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியாகின.

இந்த வரிசையில் தற்போது கைதி 2 திரைப்படமும் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூலி திரைப்படத்துக்காக ரூ.50 கோடி வேதனம் பெற்ற லோகேஷ் கனகராஜ், கைதி 2 திரைப்படத்திற்கு ரூ.75 கோடி வரை வேதனம் கேட்டதாகவும் இதனால் தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

இருப்பினும் கைதி 2 திரைப்படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Recomands
Hiru TV News | Programmes