General23 September 2025

மாணவனை தாக்கிய ஆசிரியைக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

13 வயது பாடசாலை மாணவனைக் கொடூரமாகத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கக் கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை பாடசாலையின் நூலகத்தில் வைத்து மாணவனிடம் கேள்வியொன்றைக் கேட்டதாகவும், அதற்கு அவர் பதிலளிக்காததால் கோபமடைந்த ஆசிரியை தனது கையிலிருந்த அலுமினிய அடிமட்டத்தை எறிந்ததால், அது மாணவனின் வலது கண்ணில் பட்டு அவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதன்போது காயமடைந்த மாணவன் கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
Related Recomands
Hiru TV News | Programmes