General23 September 2025

பெரசிடமோல் மாத்திரைகளில் ஓட்டிஸம் பிரச்சினை என்ற ட்ரம்பின் கருத்தை மறுத்த WHO

பெரசிடமோல் மாத்திரைகளில் ஓட்டிஸம் பிரச்சினை ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்தை உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது. 
 
முன்னதாக, குறித்த மாத்திரையை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் உட்கொள்வது நல்லதல்ல என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். 
 
அத்துடன், தடுப்பூசிகளை செலுத்துவதாலும், ஓட்டிஸம் பிரச்சினை ஏற்படுத்தக் கூடும் என அவர் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில், பெரசிடமோல் மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகளை செலுத்துவதால் ஓட்டிஸம் பிரச்சினை ஏற்படாது என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 
 
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி கூறிய விடயத்தை நம்புவதை விட தான் மருத்துவர்களை நம்புவதாக, பிரித்தானிய சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Recomands
Hiru TV News | Programmes