General11 October 2025

நோபல் குழுவை விமர்சித்த வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்பை விட, வெனிசுலாவின் ஜனநாயக ஆதரவு ஆர்வலருக்கு நோபல் பரிசு வழங்கியதற்காக, நோபல் குழுவை, வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது. 
 
அமைதியை விட அரசியலை, நோபல் குழு முன்னிலைப்படுத்தியுள்ளதாக, வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது. 
 
வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதில் அயராது பணியாற்றியதற்காக, மரியா கொரினா மச்சாடோ அமைதி பரிசைப் பெறுவார் என்று நோபல் குழு நேற்று(10) அறிவித்தது. 
 
முன்னதாக, பல உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக, இந்த விருதைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறி வந்த நிலையிலேயே, வெள்ளை மாளிகையின் கருத்து வெளியாகியுள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes