அவுஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார்.
இதைத் தடுக்க, 'ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் - 2024' என்ற சட்டத்தை அவர் கொண்டு வந்தார்.
இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்' போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது.
இது, வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளை நீக்க, 'டிக்டொக், எக்ஸ், மெட்டா' ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம், புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியது.
இந்த சட்டத்தைப் பின்பற்றி, பிரான்ஸ், டென்மார்க், கிரீஸ், ருமேனியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளும் சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு செய்துள்ளன.
Latest News
சுரேஷ் சலே வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு - விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை!
Local
05 August 2026
ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு
Local
05 August 2026
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்
Local
05 August 2026
உதயநிதி கைது முதல் விடுதலை வரை: அரசியல் மேடையில் புதிய விவாதம் – கங்கனா ரனாவத்தின் எதிர்வினை வைரல்
Local
05 August 2026
போலி புகைப்படங்களால் கொதித்த மிருனாள் தாகூர்- இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை
Local
05 August 2026
கொழும்பு போக்குவரத்தில் மாற்றம் - 7 புதிய மெட்ரோ பேருந்து பாதைகள் அறிமுகம்!
Local
05 August 2026
'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்க மறுத்தேனா? - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!
Local
05 August 2026
குட்டிமணி - தங்கத்துரை சிலை அமைப்பதற்கான நீதிமன்றத் தடை நீக்கம்
Local
05 August 2026
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்!
Local
05 August 2026
ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
Local
05 August 2026