நாடு முழுவதும் பரவிவரும் டெங்கு அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், இலங்கை வான்படை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வான்படை முகாம்களையும் உள்ளடக்கி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இலங்கை வான்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், வான்படை உறுப்பினர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள், சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழிப்பதுடன், சுற்றாடலைச் சுத்தப்படுத்தும் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளனர்.
மேலும், டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளன.
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதையும், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த வேலைத்திட்டம், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நவீன வசதிகளுடன் கூடிய சபரகமுவ மருத்துவ பீட வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர்!
Local
05 July 2026
சச்சினின் சாதனையை முறியடித்தார் 15 வயது சூர்யவன்ஷி – இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
Local
05 July 2026
ஜூலை 7 முதல் புதிய முகவர் ஊடாக இந்திய தூதரக சேவைகள் ஆரம்பம்!
Local
05 July 2026
அக்குரேகொட சட்டத்தரணி தம்பதி உயிரிழப்பு: துப்பாக்கிதாரிகளுக்கு உதவியவர் மாலைத்தீவில் கைது - காவல்துறை அதிரடி!
Local
05 July 2026
அனிருத் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு - எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
Local
05 July 2026
இயற்கை எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்: கட்டுப்பாடுகள் நீக்கம்!
Local
05 July 2026
இலங்கையிலும் சிம்பாப்வே போன்ற நெருக்கடி ஏற்படும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Local
05 July 2026
கனடாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது மொரோக்கோ!
Local
05 July 2026
LPL தொடரில் பியூஷ் சாவ்லா - வெளியான அதிரடி அறிவிப்பு!
Local
05 July 2026
ஜெக்கொப் பெத்தெல் அதிரடி - இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
Local
04 July 2026