நியூசிலாந்தில் முதன்முறையாக, அந்தநாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த 'சுவாம்ப் ஹாரியர்' (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட தீவின் வைராபா பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கழுகுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அந்தநாட்டின் உயிரியல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் கடந்த புதன்கிழமை அன்று, வெலிங்டன் அருகே கண்டெடுக்கப்பட்ட 'ப்ரவுன் ஸ்குவா' (Brown Skua) எனும் கடல் பறவைக்கு முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது உள்நாட்டுப் பறவைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, வளர்ப்புப் பறவைகளிடம் (Poultry) இதுவரை நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஆண்ட்ரூ ஹொகார்ட் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், நாட்டிலுள்ள மிகவும் அழிந்து வரும் நிலையில் உள்ள ஐந்து பறவை இனங்களைச் சேர்ந்த 300 முக்கிய இனப்பெருக்கப் பறவைகளுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், அவுஸ்திரேலியாவிலும் உள்ளூர் கடல் பறவை ஒன்றிற்குப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Latest News
வடக்கின் குடும்ப விழா 2026 - வருடாந்த மகோற்சவத்தின் பூர்வாங்க கலந்துரையாடல்
Local
18 July 2026
உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டி - வெற்றி யாருக்கு?
Local
18 July 2026
செம்மணியில் தொடரும் அகழ்வு: 36ஆவது நாளில் 6 புதிய என்புக்கூடுகள்!
Local
18 July 2026
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஈரான்!
Local
18 July 2026
72 ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பு - ராயன், அமரன், மெய்யழகன், மஹாராஜா படத்துக்கு விருதுகள்!
Local
18 July 2026
அமைதியான முறையில் போராடியவர்களை அப்பறப்படுத்திய காவல்துறை எதிர்க்கட்சி விமர்சனம்
Local
18 July 2026
இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் : இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னெடுப்பு
Local
18 July 2026
நுளம்பை பெருக்கினால் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் வழக்கு: ரூ. 25,000 வரை அபராதம்
Local
18 July 2026
அமெரிக்க இராணுவத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை: மருத்துவ நிபுணர்கள் கவலை
Local
18 July 2026
முதலமைச்சர் விஜய்யின் இறுதித் திரைப்படம்: பிரம்மாண்டமாகக் கொண்டாடுமாறு அறிவுறுத்தல்
Local
18 July 2026