General19 July 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன மற்றும் குருந்துகஹஹெதெக்ம ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், பயணிகள் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது.

இந்த தீப்பரவலையடுத்து, கொட்டாவயிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வழியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொழும்பிலிருந்து பயணிக்கும் வாகன சாரதிகள் வெலிப்பென்ன இடைமாறல் (Interchange) ஊடாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes