மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிஃபெண்டர் ரக வாகனமும், எதிர்த்திசையில் வந்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் டிஃபென்டர் வாகனத்தைச் செலுத்தியதாகக் கருதப்படும் மாத்தறை வெவஹமந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் உதயங்க (37) மற்றும் ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.வி. சுபாஷ் (36) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.
விபத்தின் போது டிஃபென்டர் வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேரும், பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான டிஃபெண்டர் ரக வாகனம் வாடகை அடிப்படையில் பெறப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மாத்தறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News
'ஜனநாயகன்' இரகசியங்களை உடைத்த இயக்குநர் எச். வினோத் : "கடைசி 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை"
Local
20 July 2026
கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து தடம்புரள்வு: சேவைகளில் தாமதம்!
Local
20 July 2026
'பேய் வீடுகளில்' ஒரு இரவு தங்கினால் ரூ.52,000 : ஜப்பானில் வினோத முயற்சி
Local
20 July 2026
பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!
Local
20 July 2026
அஜித், விக்ரம், சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்த விஜய் நிராகரித்த படங்கள் : திரையுலகை வியக்க வைத்த பின்னணி!
Local
20 July 2026
கெய்ர் ஸ்டாமர் பதவி விலகினார் - கடிதத்தை மன்னர் சார்ள்ஸ் ஏற்றுக்கொண்டார்!
Local
20 July 2026
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்
Local
20 July 2026
ஐந்து மாவட்டங்களுக்கு கடும் வெப்ப அலை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Local
20 July 2026
நச்சு விதைகளை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் 22 பேர் மருத்துவமனை அனுமதி
Local
20 July 2026
உங்கள் நிழற்படங்களும் ஆபத்தில்? - அப்பிள், கூகுள் எடுத்த அதிரடி முடிவு!
Local
20 July 2026