General05 August 2026

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை

இந்தியாவிற்கும் இலங்கைகும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (5) கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

தமது இந்த குறுகிய கால விஜயத்தின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அயல் நாடுகளான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அண்மைய நாட்களாக உயர்மட்டத் தொடர்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதோடு, பல்வேறு முக்கிய கூட்டுத் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புப் பகுதிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த விஜயம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related recommendation
Hiru TV News | Programmes