பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து, சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் 'ஈ' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று, இரவு 10:20 மணியளவில் திடீரென அந்தப்பிரவில் இருந்து வெளியேறி, கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே இந்த மோதலுக்கும் பதற்ற நிலைமைக்கும் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இலங்கை காவல்துறை, காவல்துறையின் கலவரக் தடுப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை ஆகியன உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தற்போது பதற்ற நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்திற்குள் இயல்பு நிலையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Latest News
மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!
Local
10 August 2026
‘டேர்டெவில்’ திரைப்படத்தின் கதை இப்படி தான் இருக்கும்: மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்
Local
10 August 2026
சம்பளத்தில் மட்டுமல்ல... செல்வாக்கிலும் முன்னணியிலுள்ள நடிகைகளின் பட்டியல் வெளியீடு!
Local
10 August 2026
சுரேஷ் சலேயின் மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் மீதான பரீசிலனை ஒத்திவைப்பு
Local
10 August 2026
துறைமுக நகரில் குடியேறுவோருக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை: எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை
Local
10 August 2026
சந்திக ஹதுருசிங்கவுக்கு 164,000 அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்
Local
10 August 2026
அன்று சூர்யாவைப் பார்க்க முடியாத ஏக்கம்... இன்று அவருக்கே ஜோடி! - மமிதா பைஜு கூறிய நெகிழ்ச்சிச் சம்பவம்!
Local
10 August 2026
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம்!
Local
10 August 2026
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் : வியக்க வைக்கும் தகவல்
Local
10 August 2026
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது
Local
10 August 2026