கடந்த காலத்தில் வான் மற்றும் கடல் வழியாகக் கிலோ கணக்கில் பெருமளவு போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதற்கு, அப்போதைய அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளின் மறைமுக ஆதரவும் அனுசரணையும் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால், விசாரணைகளில் தங்களது பெயர்கள் தெரிந்துவிடுமோ என்ற பயத்திலேயே அரசியல்வாதிகள் சிறைச்சாலை மோதல்களையும் கலவரங்களையும் பின்னணியில் இருந்து தூண்டிவிடுகின்றனர்.
கடந்த காலத்தில் சிறைச்சாலைகளுக்குள்ளிருந்தே போதைப்பொருள் வியாபாரம் தடையின்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய ஆட்சியின்கீழ் அது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைச் சம்பவங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி, பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைய, நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளும் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இதுபோன்ற சதித்திட்டங்களைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எந்தக் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தாலும் இந்த அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Latest News
நந்தா மாலனியின் மறைவு :மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு!
Local
20 August 2026
வர்த்தக நிலையங்களில் பொருட்களுக்கான கொள்முதல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் : நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தல்!
Local
20 August 2026
இணுவிலில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
Local
20 August 2026
“இதுவே எனது கடைசி உரையாக இருக்கலாம்” – சபையில் இராமநாதன் அர்ச்சுனா நெகிழ்ச்சி
Local
20 August 2026
நந்தா மாலனி காலமானார்
Local
20 August 2026
இராஜகிரிய பகுதியில் காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு
Local
20 August 2026
முஸ்லிம் தாதியர்களின் ஆடை விவகாரம் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா கேள்வி
Local
20 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா? – வைரலாகும் நிழற்படத்தின் பின்னணியில் உள்ள உண்மை!
Local
20 August 2026
“சாரைப்பாம்பு மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போல துடிக்கிறார்கள்” – சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவேசம்!
Local
20 August 2026
தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவா? – ஜி.வி.பிரகாஷின் அதிரடி பதில்!
Local
20 August 2026