General23 August 2026

தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கம்பஹா பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

42 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு, கம்பஹா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்காக 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

சமய ஸ்தலங்களை பலப்படுத்தி சகவாழ்வுமிக்க எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இதன் மூலம் அந்த பகுதியிலுள்ள சமய ஸ்தலங்களின் வசதிகளை மேம்படுத்துவதையும் மதநல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதையும் எதிர்பார்ப்பதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes