நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சுமார் 200 கிலோமீற்றர் தொலைவை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ள நிலையில், மனித உடலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் புதன்கிழமை காலை போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் பல பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளப்பெருக்கில் ஆற்றின் கரையோரங்களில் இருந்த கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவை கண்டகி ஆற்றின் வழியாக இந்தியாவுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கண்டகி ஆற்றில் இருந்து நான்கு பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இதுகுறித்து நேபாள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், குஷிநகர் பகுதியில் இருந்து மேலும் மூன்று பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீட்கப்பட்ட ஏழு பேரின் உடலங்களின் புகைப்படங்கள் நேபாள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவில் இதுவரை 472 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 469 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சுமார் 1,400 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளப்பெருக்கினால் பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Latest News
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அஜித் : கொந்தளிக்கும் ரசிகர்கள் - இருதரப்பு வாதமாக மாறிய சமூக வலைத்தள விவாதம்!
Local
06 September 2026
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சாதனைப் படைத்த தென் ஆப்பிரிக்க இளம் வீரர்!
Local
06 September 2026
புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டு நிறைவு : தேசிய மக்கள் சக்தியின் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்
Local
06 September 2026
கபொத உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் - ஆண்டின் இறுதிக்குள் பெறுபேறுகளை வெளியிடத் திட்டம்
Local
06 September 2026
அங்கீகரிக்கப்படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
Local
06 September 2026
அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி - ஹோர்முஸ் நீரிணையில் 3 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல்
Local
06 September 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை : பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!
Local
06 September 2026
ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்!
Local
06 September 2026
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!
Local
06 September 2026
டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் செம்பியன் பட்டம் வென்று ருமேஷ் தரங்க வரலாற்று சாதனை!
Local
06 September 2026