Entertainment05 July 2026

அனிருத் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு - எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

மாநகரம், கைதி, விக்ரம், லியோ மற்றும் கூலி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராக அவதாரமெடுத்துள்ளார்.
 
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘DC’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இதன்படி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘DC’ திரைப்படம் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், குறித்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே வெளியான 'Raga of Revenge' பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ‘DC’ திரைப்படத்தின் அடுத்த பாடல் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes