Entertainment05 July 2026

திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்த கருப்பு

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

தமிழகம் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் வசூல் வேட்டை நடத்திய இந்த திரைப்படம், நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான குறித்த திரைப்படத்தில் திரிஷா, சுவாசிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உலகளவில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள இந்த திரைப்படம், ஓடிடியில் வெளியான பின்னரும் தற்போதும் சில திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

குறித்த திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, இது ஒரு மாபெரும் வெற்றி எனக் குறிப்பிட்டு தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விசேட போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes