பொலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான் (61), தனது நீண்டகால காதலியான தொழில்முனைவோர் கௌரி ஸ்ப்ராட்டை இன்று (05) மும்பையில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்.
மும்பை, பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ள அமீர் கானின் இல்லத்தில் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணப் பதிவு இன்று முறைப்படி நடைபெற்றது.
ஜூலை 5ஆம் திகதி இரு குடும்பத்தினர் மற்றும் முக்கிய நண்பர்களின் பங்கேற்புடன் வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடைபெறவுள்ளதாக முன்னதாக அமீர் கான் தெரிவித்திருந்தார்.
பெங்களூரைச் சேர்ந்த கௌரி ஸ்ப்ராட், வடிவமைப்பு மற்றும் அழகுக்கலை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு தொழில்முனைவோர் ஆவார்.
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக இருந்த இவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 60ஆவது பிறந்தநாளின் போது அமீர் கான், கௌரியை ஊடகங்களுக்குத் தனது துணையாக அறிமுகப்படுத்தியிருந்தார்.
பொலிவுட்டின் வழக்கமான ஆடம்பரத் திருமணங்களைப் போலன்றி, முற்றிலும் தனிப்பட்ட முறையில் இந்த திருமண நிகழ்வு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பொலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ராஜ்குமார் ஹிரானி, அசுதோஷ் கோவாரிகர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்ட மிக முக்கிய பிரபலங்கள் சிலரே கலந்துகொண்டனர்.
Latest News
டி20 போட்டிகளால் கிரிக்கெட் சீரழிந்துவிட்டது - அர்ஜுன ரணதுங்க காட்டம்!
Local
07 July 2026
குப்பை கொட்டினால் கடும் தண்டனை - வெளியான அதிரடி எச்சரிக்கை!
Local
07 July 2026
கியோம் நகரை வந்தடைந்தது கமேனியின் உடலம்!
Local
07 July 2026
தங்கக் காலணி விருதுக்கான போட்டியில் மெஸ்ஸி, எம்பாப்பேயுடன் இணைந்தார் ஹாலாண்ட்!
Local
07 July 2026
கனடாவை உலுக்கிய இரட்டை சூறாவளிகள் - உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்!
Local
07 July 2026
சிறுவனை கடித்த காட்டு ஓநாய் : கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!
Local
07 July 2026
கனடாவில் குடிநீர் விவகாரத்தில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள்
Local
07 July 2026
விலங்கு தீவனத்திற்கு நெல், அரிசியைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
Local
07 July 2026
"பழிவாங்கல் என்பது ஒருபோதும் சிறந்த ஆட்சியாகாது" – முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சாடல்
Local
06 July 2026
ஏவுகணைப் பற்றாக்குறை: யுக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா உக்கிரத் தாக்குதல்!
Local
06 July 2026