Entertainment08 September 2026

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது த்ரிஷா அனுப்பிய அந்த ஒரு குறுஞ்செய்தி : மாளவிகா மோகனன் பகிர்ந்த இரகசியம்!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தனக்கு முதலில் குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவித்தவர் நடிகை த்ரிஷா என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து பேசிய மாளவிகா மோகனன், ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த தகவல் வெளியானதும், முதலில் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவித்தது த்ரிஷாதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஹே பேப், இது பெரிய விஷயம். சூப்பரா பண்ணு” என த்ரிஷா தனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவித்ததாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes