Sports23 September 2025

பணச்சலவை குற்றச்சாட்டில் யுவராஜ் சிங்கிடம் அமுலாக்கத்துறை விசாரணை

இணையவழி சூதாட்ட செயலியான 1xBet உடன் தொடர்புடைய பணச்சலவை தொடர்பான விசாரணைக்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் (43) இன்று அமுலாக்க துறையில் முன்னிலையானார்.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமுலாக்க துறையின் டெல்லி அலுவலகத்தில் யுவராஜ் சிங்கின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

கடந்த சில வாரங்களாக, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரொபின் உத்தப்பா, மிமி சக்ரவர்த்தி, அங்குஷ் ஹஸ்ரா உள்ளிட்ட பல பிரபலங்களை அமுலாக்கத் துறை விசாரித்துள்ளது,

அதே நேரம், நடிகர் சோனு சூட், நாளைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இணைவழி சூதாட்டம் இந்தியாவில் சட்டவிரோதமானது என்றாலும், 1xBet எவ்வாறு கோடிக்கணக்கான பயனர்களை ஏமாற்றியது, வரிகளைத் ஏய்த்தது மற்றும் பிரபலங்களை ஒப்புதல்களுக்காக ஈடுபடுத்தியது என்பது குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்துகிறது.

இந்த சூதாட்டங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் மற்றும் வருவாயை "குற்றத்தின் வருமானம்" என வகைப்படுத்த முடியுமா என்பதை நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

இந்திய மத்திய அரசாங்கம், 2022 ஆம் ஆண்டு முதல் 1,500 க்கும் மேற்பட்ட பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களைத் தடை செய்துள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes