Sports16 June 2026

ஈரான்- நியூசிலாந்து ஆட்டம் 2-2 என சமநிலையில் நிறைவு

கால்பந்து தொடரின் G குழுவிற்கு இடையிலான இன்றைய (16) போட்டியில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

தொடர் ஆரம்பமாகிய சில நிமிடங்களிலேயே நியூசிலாந்தின் கிறிஸ் வூட் கொடுத்த அருமையான பாஸை பயன்படுத்தி, எலிஜா ஜஸ்ட் பந்தை கோல் வலையினுள் செலுத்தி தனது அணிக்கு 1-0 என ஆரம்ப முன்னிலையைப் பெற்று கொடுத்தார்.

ஈரானின் தொடர் முயற்சிகளுக்குப் பலனாக 32ஆவது நிமிடத்தில் ரமின் ரெசேயன் ஒரு சிறப்பான கோல் அடித்து போட்டியை 1-1 என சமநிலைப்படுத்தினார்.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும், எலிஜா ஜஸ்ட், தனது இரண்டாவது கோலை பதிவு செய்து நியூசிலாந்தை 2-1 என முன்னிலைக்கு உயர்த்தினார்.

64ஆவது நிமிடத்தில் ரமின் ரெசேயன் வலது புறத்தில் இருந்து கொடுத்த துல்லியமான க்ரொஸை (Cross), ஈரானின் மொஹமட் மொஹேபி ஹெட்டர் மூலம் கோலாக மாற்றி மீண்டும் ஆட்டத்தை 2-2 என சமப்படுத்தினார்
Related recommendation
Hiru TV News | Programmes