Sports26 July 2026

சி.எஸ்.கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார்? இறுதிக்கட்டத்தில் தேர்வு – தோனி தீவிர ஆலோசனை!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான மகேந்திர சிங் தோனி, புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் செயல்முறையில் முக்கிய பங்காற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சம கால டி20 (T20) கிரிக்கெட்டின் வேகமான ஆட்டமுறைகள், புதிய உத்திகள் மற்றும் அணியின் எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற பயிற்சியாளரை நியமிக்க CSK நிர்வாகம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes