இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஒட்டுமொத்த வணிக மதிப்பு 11.4 சதவீதம் அதிகரித்து 20.6 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
ஹூலியன் லோகி (Houlihan Lokey) நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் (IPL) வர்த்தக மதிப்பீட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பிளாக்ஸ்டோன் உள்ளிட்ட நிறுவனங்கள் 1.78 பில்லியன் டொலருக்கும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை மிட்டல் குடும்பம் மற்றும் ஆதார் பூனாவாலாவும் 1.65 பில்லியன் டொலருக்கும் வாங்கியுள்ளன.
அதிகாரப்பூர்வ பிராண்ட் மதிப்பீட்டில் 312 மில்லியன் டொலர்களுடன் ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி 264 மில்லியன் டொலர் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 245 மில்லியன் டொலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளதுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 244 மில்லியன் டொலர் மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளது.
இதர அணிகளின் நிலவரப்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 168 மில்லியன் டொலர் மதிப்புடன் 5 ஆம் இடத்திலும், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் எழுச்சி மற்றும் புதிய உரிமையாளர் மாற்றத்தால் பயனடைந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் 161 மில்லியன் டொலர் மதிப்புடன் 6 ஆம் இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
டிஜிட்டல் ஊடகப் பார்வைகள் மற்றும் இணைக்கப்பட்ட தொலைக்காட்சிகளின் வளர்ச்சியால் ஐ.பி.எல் இன் வணிக மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.
Latest News
ஃபிஃபா என்ற உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தலைவர் ஜான்னி இன் உலகக் கிண்ணப் பங்குகள் விற்பனை திட்டத்திற்கு தீவிர எதிர்ப்பு: முக்கிய அதிகாரி குற்றச்சாட்டு: மூத்த ஆலோசகர் பதவி விலகினார்.
Local
01 August 2026
கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!
Local
01 August 2026
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய பதில்: இணையத்தில் வைரலாகிறது
Local
01 August 2026
எல் நினோ வாசற்படியில் இல்லை: வீட்டுக்குள் வர ஆரம்பித்துவிட்டது- ஐக்கிய நாடுகள் சபை
Local
01 August 2026
சிறுவயதில் பெற்றோருக்கு தொலைபேசியில் பேசி செய்து குறும்புத்தனம் செய்வேன்: ஜேசன் சஞ்சய் கூறும் சுவாரஸ்ய தகவல்!
Local
01 August 2026
மிரிஸ்ஸவில் துப்பாக்கிச்சூடு: கடற்றொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
31 July 2026
இலங்கையில் மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு !
Local
31 July 2026
ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் பேரீச்சம்பழ அறுவடை: ஊர் மக்கள் நெகிழ்ச்சி!
Local
31 July 2026
பாகிஸ்தானில் பனிச்சரிவு: காணாமல் போன மலையேற்ற வீரர்களில் நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு!
Local
31 July 2026
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை
Local
31 July 2026