General02 November 2023

உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியரிடம் வாக்குமூலம் பெற்ற பயங்கரவாதத் தடுப்பு பிரிவு!

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியரிடம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நேற்று (01) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி உதயன் பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் தொடர்பான செய்தியும், புகைப்படமும் வெளியாகியிருந்தது.

அது தொடர்பாகவும், அன்றைய தினம் வெளியாகியிருந்த தமிழ்த் தேசியக் கட்சி மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த செய்தி தொடர்பாகவுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் செய்தி மற்றும் ஒளிப்படம் தொடர்பாகவும், யாழ்ப்பாணம் காவல்துறையினரால் முன்னர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes