General22 September 2025

பாலஸ்தீன நாடு என்ற ஒன்றே இருக்காது - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

பிரித்தானியா கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

இந்த நடவடிக்கை பிராந்தியத்தை மேலும் சீர்குலைத்து அமைதியான தீர்வுக்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வாரம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு முன்னதாக, பாலஸ்தீன அரசை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இருக்காது என இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.

தங்களுடைய நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை தங்கள் மீது திணிக்கும் முயற்சிகளுக்கு தான் அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குத் திரும்பிய பிறகு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஜோர்டான் நதியின் மேற்கில் எந்தப் பாலஸ்தீன அரசும் நிறுவப்படாது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Related Recomands
Hiru TV News | Programmes