General23 September 2025

தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் மோகன்லால்

71 ஆவது தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் நடைபெற்ற நிலையில், திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 
 
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். 
 
1980-களில் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
400-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
திரைத்துறைக்கு மோகன்லால் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக இவருக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2019 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், சினிமாவுக்கு மோகன்லால் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக இவருக்கு திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைக் கடந்த 20 ஆம் திகதி மத்திய அரசு அறிவித்தது. 
 
அதன்படி, டெல்லியில் நடைபெற்ற 71 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார்.
Related Recomands
Hiru TV News | Programmes