General13 November 2025

இணையத் தாக்குதலால் அவதியுறும் பிரித்தானியா

பிரித்தானியாவில் அண்மைக் காலமாக இணையத் தாக்குதல் தீவிரம் அடைந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
இந்நிலையில் அரச சேவைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைப் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துள்ளது. 
 
அதற்கமைய சட்டங்களைக் கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
பிரித்தானிய தேசிய சுகாதார சேவை போன்ற அரசாங்க அமைப்புகளுக்கும், தனியார் துறை நிறுவனங்களுக்கும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உயர் பாதுகாப்புத் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்தச் சட்டப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பெரிய அளவிலான இணையத் தாக்குதல்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்க துறைக்கும் தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப ஆதரவு, இணையப் பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கான விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes