General27 November 2025

பதுளையில் மற்றுமொரு மண்சரிவு: மூவர் மாயம்

பதுளை மாவட்டத்தின் புசல்லாவ, தல்தென பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் வீடு ஒன்று மண்ணுக்குள் புதையுண்டதில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதுடன் 5 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்
Related recommendation
Hiru TV News | Programmes