General27 November 2025

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயத்தின் உச்ச எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் ஏழு மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை 3 (சிவப்பு) மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி,பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் அபாயம் நிறைந்த பகுதிகளில் வசிப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes