General04 December 2025

பல மாகாணங்களுக்கு இன்று முதல் மழை

வடகிழக்கு பருவமழை நிலைபெற்றதன் காரணமாக இன்று முதல் அப்பகுதிகளில் மிதமாக மழை பெய்யும் என வளியமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றிரவு (4) முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அத்துடன், அடுத்து வரும் நாட்களில் மாலை வேளைகளில் மத்திய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes