General17 December 2025

காணாமல்போன அனகொண்டா கிடைத்து விட்டது

தெஹிவளை விலங்கினச்சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மஞ்சள் அனகொண்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை விலங்கினச்சாலையின் நிர்வாக பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். 
 
அனகொண்டாவை தேடுவதற்காக பகல் மற்றும் இரவு நேர தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 
 
இந்தநிலையில் நேற்று (16) இரவு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அனகொண்டா கூண்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அலுமாரியின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். 
 
மேலும் அனகொண்டாவின் கூண்டில் உள்ள மிகச் சிறிய துளை வழியாக அது சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
அனகொண்டா குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தற்போது அது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes