General15 January 2026

இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். 
 
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி திட்டத்தின் கீழ், குறித்த மனிதாபிமான திட்டங்கள் மேலும் வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை நேற்று சந்தித்த போது அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார். 
 
இருவருக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 
 
டிட்வா பேரிடரின் போது இந்தியா வழங்கிய உதவிகளுக்கு ரவூப் ஹக்கீம் நன்றி தெரிவித்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes