General03 May 2026

ஈரானுடனான போர் குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

ஈரானுடனான போர் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த நாட்டு காங்கிரஸிற்குத் அறிவித்துள்ளார். 
எனவே, போர் அதிகாரச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான காலக்கெடு தமக்குக் பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமெரிக்கச் சட்டப்படி, ஒரு ஜனாதிபதி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த 60 நாட்களுக்குள் காங்கிரஸின் அனுமதியைப் பெற வேண்டும், இல்லையெனில் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் காங்கிரஸ் தலைவர்களுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
அதில், கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி முதல் அமெரிக்கப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான போர் நடவடிக்கைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால், சட்டரீதியான அனுமதியைப் பெறுவதற்கான காலக்கெடு தமக்கு அவசியமில்லை என்றும்; ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes