உலகின் முன்னணி யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் , யூடியூப் வரலாற்றில் முதன்முறையாக 500 மில்லியன் (50 கோடி) சந்தாதாரர்களைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2025 ஜூன் மாதம் 400 மில்லியன் சந்தாதாரர்களைக் கடந்த அவர், சரியாக ஓராண்டுக்குள் மேலும் 100 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்த அசாத்திய சாதனையைப் பாராட்டி, யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், மிஸ்டர் பீஸ்ட்டின் 'சிறுத்தை' லோகோ வடிவில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட '500M பிளே பட்டன்' விருதை அவருக்கு நேரில் வழங்கிக் கௌரவித்தார்.
தனது புதிய வீடியோவின் இறுதியில் இந்த விருதைப் பெற்றுக்கொண்ட ஜிம்மி, பூஜ்ஜியத்தில் தொடங்கிய தனது ஆரம்பகால யூடியூப் பயணத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
பிரம்மாண்டமான சவால்கள், மில்லியன் டொலர் பணப்பரிசுகள் அடங்கிய காணொளிகள் மூலம் உலகப் புகழ்பெற்ற மிஸ்டர் பீஸ்ட், 'பீஸ்ட் ஃபிலாந்த்ரோபி' மற்றும் 'டீம் ட்ரீஸ்' போன்ற அமைப்புகள் மூலம் உலகளவில் பல்வேறு தொண்டுப் பணிகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கேரளாவில் வேகமெடுக்கும் ஷிகெல்லா தொற்று : 5 பேர் உயிரிழப்பு!
Local
16 June 2026
காலி தேசிய மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் தீ விபத்து
Local
16 June 2026
வடக்கு - கிழக்கு மக்களை “விசித்திரமானவர்கள்” எனக் காட்டும் குடும்ப அட்டை நடைமுறை
Local
16 June 2026
தேசிய மக்கள் சக்தியின் அலட்சியத்தால் டெங்கு பரவல் தீவிரம்
Local
16 June 2026
உயிர்மாய்ப்பு தொடர்பான செய்திகள் மற்றும் காணொளிகளை பகிர்வதை தவிருங்கள் : பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அவசர வேண்டுகோள்!
Local
16 June 2026
யோஷித ராஜபக்ஷவின் மனு மீதான கட்டளை ஜூலை 3 ஆம் திகதி!
Local
16 June 2026
கடன் சுமை 35 ட்ரில்லியனாக அதிகரிப்பு: அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் தயாசிறி
Local
16 June 2026
கைதாவதை தடுக்க கோரி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு
Local
16 June 2026
யூடியூப்பில் 500 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று மிஸ்டர் பீஸ்ட் உலக சாதனை!
Local
16 June 2026
கனடாவில் தீவிரமடையும் வைரஸ் பரவல் : அமெரிக்கா விடுத்துள்ள அவசர பயண எச்சரிக்கை!
Local
16 June 2026