உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக படிப்படியாகப் பறித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் சட்டமூலம் தொடர்பில், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"தற்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுச்சூழல் சட்டமூலத்தின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகக்குறைந்த அதிகாரங்களும் மத்திய அரசுக்கு மீண்டும் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழல் விவகாரங்களில் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையானது உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, உள்ளூராட்சி மன்றங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான ஆளணியினரை நியமிக்க அரசாங்கம் அனுமதிப்பதில்லை. கழிவகற்றும் வாகனங்களுக்கான அனுமதி வழங்கல்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதுடன், மன்றங்களைச் செயலிழக்கச் செய்யும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முற்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான அதிகாரப் பறிப்புச் செயற்பாடுகள் முன்னைய காலப்பகுதிகளில் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது" என அவர் குற்றம் சாட்டினார்.
Latest News
முன்மொழியப்பட்ட ஊடகப் பட்டயச் சட்டமூலம் ஒரு ‘மும்மடங்கு ஒடுக்குமுறை’ - அரசாங்கத்துக்கு CSMD கடும் கண்டனம்!
Local
25 June 2026
ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை
Local
25 June 2026
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
25 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாவாகப் பதிவு
Local
25 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு, 700க்கும் அதிகமானோர் காயம்
Local
25 June 2026
5 மாதங்களில் 7 பில்லியன் டொலர் மைல்கல் சாதனை: இலங்கையின் ஏற்றுமதித் துறை அதிரடி வளர்ச்சி!
Local
25 June 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பாரிய வீழ்ச்சி
Local
25 June 2026
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது: தியாகராஜா நிரோஷ் கண்டனம்
Local
25 June 2026
ஜூலை 1 முதல் பேருந்து கட்டண திருத்தம் - தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை!
Local
25 June 2026
மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Local
25 June 2026