மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவுள்ளன.
அத்துடன், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் காரணமாக, கொழும்பின் பல பகுதிகள் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை சனிக்கிழமை (ஜூலை 04) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான அனைத்துப் பகுதிகள்
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட
ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல,கொலன்னாவ, ஐனுர், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை,கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய இடங்களில் நீர் விநியோகத்தடை .
மேற்க்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில், நீர் விநியோகம் தடைப்படும் காலப்பகுதியில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம்
Local
28 August 2026
நவோதயபுரம் வீட்டுத்திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
Local
28 August 2026
தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா
Local
28 August 2026
உச்சக்கட்ட திருப்பம்: சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!
Local
28 August 2026
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்துச் சேவைகளில் பாதிப்பு
Local
28 August 2026
தமிழகத்தில் நலத்திட்டங்களை சொந்தப்பணத்தில் செய்யும் விஜய்?
Local
28 August 2026
உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், இலங்கைக்கு 120 ஆவது இடம்
Local
28 August 2026
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்
Local
28 August 2026
பெண்கள், குழந்தைகளின் அந்தரங்க படங்களை பகிர்ந்தவர் கைது !
Local
28 August 2026
முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!
Local
28 August 2026