General03 July 2026

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரி வெற்றி

தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் Hiru Relay Championship 2026 அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடரில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரி வெற்றி பெற்றது.

ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், ஹிரு ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த அஞ்சலோட்டப் போட்டி, கல்வி அமைச்சின் அனுமதியுடன் அனைத்து வயதுப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்படுகின்றது.

இதில் நாடளாவிய ரீதியில் இருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes