General04 July 2026

டெங்கு ஒழிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் கழிவகற்றல் மற்றும் கழிவு மேலாண்மைப் பிரச்சினைகளுக்கு அவசர தீர்வுகளைக் காண்பதற்கான விசேட கூட்டமொன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது.
 
இந்த கலந்துரையாடல் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தலைமையில் இடம்பெற்றது.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படுவதனால், இந்த நெருக்கடியை முறியடிப்பதற்கு அரச நிறுவனங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒருங்கிணைப்பை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கழிவுகளை சேகரிக்கும் செயல்முறையை மேலும் முறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார் என பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes