தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை இன்று மேற்கொள்கிறார்.
அதன்படி, பெரம்பூர் தொகுதிக்கான புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார்.
வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நேரடியாகச் சென்று தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்க இந்த அலுவலகம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த 45,000 பயனாளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை முதலமைச்சர் வழங்குகிறார்.
இதன் மூலம் தகுதியுள்ள மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றிப் பெற முடியும்.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் பெரம்பூர் தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில் செயல்படுத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
நிலக்கரி கொள்முதல் விவகாரம் - லக்விஜய மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் விசாரணைக்கு அழைப்பு
Local
13 July 2026
ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
Local
13 July 2026
மின் கசிவால் களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - தீயணைப்பு வாகனம் அனுப்பி வைப்பு
Local
13 July 2026
ஜோர்தானின் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல்
Local
13 July 2026
பெரம்பூர் தொகுதி மக்களுக்காக குறைகேள் நடவடிக்கைகள்: ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் விநியோகம்
Local
13 July 2026
சர்வதேச சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளி விலை
Local
13 July 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
Local
13 July 2026
திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு 2019 முதல் காலாவதியான நிலையில்!
Local
13 July 2026
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது
Local
13 July 2026
இன்று மீண்டும் திறக்கப்படுகிறது கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்!
Local
13 July 2026