Sports15 July 2026

சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு?

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங்கின் விலகலுக்குப் பிறகு, எம்.எஸ். தோனிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2027 ஐபிஎல் தொடரில் அவர் அணியின் ஆலோசகராக (Mentor) பொறுப்பேற்று, புதிய பயிற்றுவிப்பாளரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரை நேரில் கண்டு ரசித்து வருகின்றார் தோனி.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்குடன் அவர் உரையாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

போட்டியைப் பொறுத்தவரை, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes