தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
”323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டேன் பிரிசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான விவகாரத்தில் ரங்க நிஷாந்த ராஜபக்ஷ என்ற திறைசேரி அதிகாரி, உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.
தற்போது, முன்னாள் காவல்துறை மாஅதிபர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் எதுவுமே புரியாமல் உள்ளது” என குறிப்பிட்டார்.
இவற்றை உயிர்மாய்ப்பு சம்பவங்கள் என்று மறந்துவிட முடியாது என குறிப்பிட்ட அவர் இவற்றில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்துக்குத் திறனோ அல்லது வலிமையோ இல்லையெனில், FBI போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியைப் பெற்று விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்

Latest News
'ஜனநாயகன்' இரகசியங்களை உடைத்த இயக்குநர் எச். வினோத் : "கடைசி 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை"
Local
20 July 2026
கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து தடம்புரள்வு: சேவைகளில் தாமதம்!
Local
20 July 2026
'பேய் வீடுகளில்' ஒரு இரவு தங்கினால் ரூ.52,000 : ஜப்பானில் வினோத முயற்சி
Local
20 July 2026
பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!
Local
20 July 2026
அஜித், விக்ரம், சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்த விஜய் நிராகரித்த படங்கள் : திரையுலகை வியக்க வைத்த பின்னணி!
Local
20 July 2026
கெய்ர் ஸ்டாமர் பதவி விலகினார் - கடிதத்தை மன்னர் சார்ள்ஸ் ஏற்றுக்கொண்டார்!
Local
20 July 2026
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்
Local
20 July 2026
ஐந்து மாவட்டங்களுக்கு கடும் வெப்ப அலை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Local
20 July 2026
நச்சு விதைகளை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் 22 பேர் மருத்துவமனை அனுமதி
Local
20 July 2026
உங்கள் நிழற்படங்களும் ஆபத்தில்? - அப்பிள், கூகுள் எடுத்த அதிரடி முடிவு!
Local
20 July 2026