General27 July 2026

தெய்வேந்திரமுனை விஷ்ணு ஊர்வல காவடி ஆட்டத்துக்கு அனுமதி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரையில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த முறையும் பங்கேற்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாளை நடைபெறவுள்ள பெரஹரையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரை மேலதிகமாக ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes