General28 July 2026

டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!

இலங்கையில் டெங்கு கட்டுப்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா, மெலத்தியன் (malathion) எனப்படும் பூச்சி நாசினித் தொகுதியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், புகைவிசிறல் மூலம் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் இரசாயனம் சில பகுதிகளில் நுளம்புகளுக்கு எதிராக போதுமான அளவு செயல்திறன் கொண்டதாக இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்ததையடுத்து, மெலத்தியன் பூச்சி நாசினியை வழங்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்ததாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் மெலத்தியனின் செயல்திறனைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே அதனை பெற்றுக்கொள்வதாகவும், ஒரு சில நாட்களில் சுமார் 500 லீற்றர் இரசாயனம் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 82,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 61 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes