அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் இன்னும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அந்த நாட்டின் இணைய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் முறையான வயது சரிபார்ப்பு முறைகளை நடைமுறைப்படுத்த தவறியதே இதற்கு காரணம் என வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், கணக்கெடுப்பில் பங்கேற்ற சிறுவர்களில் 86 சதவீதம் பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திய நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகும் அந்த எண்ணிக்கை 81 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.
கணக்குகளை தொடர்ந்து வைத்துள்ள சிறுவர்களில் பலர், தளங்கள் தங்களின் வயதை சரிபார்க்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
சிலர் தங்களின் வயதை 16க்கு மேல் என மாற்றியமைத்தும், முறையற்ற வயது சரிபார்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்தியும் கட்டுப்பாடுகளைத் தடுத்துள்ளனர்.
எனினும், இந்த தடைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்த சட்டம் பெற்றோர் மத்தியிலான விவாதங்களில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பல மில்லியன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Latest News
ஹர்திக் பாண்டியாவிற்காக போட்டிபோடும் 3 அணிகள் : தக்க வைக்கப்போவது யார்?
Local
02 August 2026
ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் திடீர் திருப்பம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
Local
02 August 2026
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
Local
02 August 2026
43 வயதிலும் குறையாத அழகு: நடிகை அனிதா ஹாசினந்தானியின் புகைப்படங்கள் வைரல்!
Local
02 August 2026
தடைசெய்ய முடியாத வசூல் மழை : 10 நாட்களில் மாபெரும் சாதனை படைத்த 'ஜனநாயகன்'
Local
02 August 2026
ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதற்கு ஒப்புதல் - இஸ்ரேலும் இணைந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை அமைதியின்மை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
Local
02 August 2026
கண்ணை நம்ப முடியாத அதிசயம் : பல ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் திருமணம்!
Local
02 August 2026
தாக்குதலை ஒத்திவைக்க ஈரான் கோரிக்கை - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026
ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி, 21 பேர் காயம்
Local
02 August 2026