இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டு, அதனை நடத்தி விளம்பரப்படுத்தியதாக ‘TM App’ என்ற செயலி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, வங்கிச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலில் ‘TM App’ செயலியும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்தப் பட்டியலில் Qnet/Questnet, MTFE, OnmaxDT, Fruugo Oline, Beecoin App, Windex Trading, Smart Win Entrepreneur, Infinity Rover (Pvt) Ltd மற்றும் TM App உட்பட மொத்தம் 26 நிறுவனங்களும் செயலிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இயங்கி வரும் இவ்வாறான தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில், இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
இலங்கை தேயிலைக்கு பலத்த வரவேற்பு - ஜூலை ஏலத்தில் விலை அதிரடியாக அதிகரிப்பு
Local
06 August 2026
தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி : இன்று மீண்டும் அதிகரித்தது தங்க விலை!
Local
06 August 2026
பல்கலைக்கழக சேர்க்கைக்கான பதிவுகள் ஆரம்பம் - மேன்முறையீடுகளுக்கு ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை அவகாசம்
Local
06 August 2026
திருகோணமலையில் குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Local
06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!
Local
06 August 2026
நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை
Local
06 August 2026
தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!
Local
06 August 2026
தனது பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய பிரபல நடிகை!
Local
06 August 2026
சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
06 August 2026
மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்து!
Local
06 August 2026