General08 August 2026

"நீண்ட காலம் துன்பப்படுவதை விட சிறைச்சாலையில் இறப்பதே மேல்!" – கைதிகளின் ஆபத்தான மனநிலை குறித்து ஸ்ரீநேசன் எச்சரிக்கை!

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக நிகழும் மோதல்கள் மற்றும் குழப்பங்கள், அரசாங்கம் தனது நிர்வாகக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதை வெளிப்படையாகக் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சூரியனின் விழுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் கைதிகள் அடைக்கப்படுவதால், அங்கு அடிப்படை வசதிகள் இன்றி பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழல் கைதிகளிடையே கடும் அதிருப்தியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக, சிறைச்சாலையில் நீண்ட காலம் துன்பப்படுவதை விட மோதல்களில் ஈடுபடுவதோ அல்லது உயிரிழப்பதோ மேல் என்ற ஆபத்தான மனநிலைக்கு கைதிகள் தள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes