General08 August 2026

சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ள ஆபத்தானவர்கள் குறித்து ஸ்ரீநேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்திய குற்றவாளிகள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள குழுவைச் சேர்ந்த பெரும்பாலானோர் தற்போது சிறைச்சாலைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் இத்தகைய குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சில அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி, பரஸ்பர புரிதலுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாகச் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, போதைப்பொருள் வழக்கில் கைதான 'பளைய சுதா' என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, தான் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதிக்கு மாதந்தோறும் 60 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வழங்கி வந்ததாகக் கூறியிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளில் ஒளிந்திருந்த முக்கிய பாதாள உலகக் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கூடக் கைது செய்து சிறையில் அடைத்து, போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes