General13 August 2026

'பெக்கோ சமனின்' தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - சந்தேகநபர்களின் உந்துருளி மீட்பு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் உந்துருளி ஊருபொக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாத்தறை - ஊருபொக்க காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த உந்துருளியைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes