General14 August 2026

"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!

பத்தரமுல்லையில் உள்ள பிரபல விருந்தகம் ஒன்றிற்குள் முதலை புகுந்ததையடுத்து, அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

அந்தக் காணொளியில், ஏரிக்கு அருகில் அமைந்துள்ள விருந்தகத்தின் விருந்து மண்டபத்திற்குள் முதலை ஒன்று உலாவுவது தெரிகிறது.

பின்னர் விருந்தக ஊழியர்கள், தோட்டத்திற்கும் ஏரிக்கும் செல்லும் கதவின் வழியாக அந்த முதலையை பாதுகாப்பாக வெளியேற்றி வழிநடத்திச் செல்வது அதில் பதிவாகியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes